தொடரும் கொரோனா பாதிப்பு : நியூயார்க்கில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு …!

தொடரும் கொரோனா பாதிப்பு : நியூயார்க்கில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு …!

கொரோனா பாதிப்பு தொடர்ந்து வரும் நிலையில் நியூயார்க்கில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி மட்டுமே இருக்கிறது. இருப்பினும் கொரோனா பல முறைகளிலும் உருமாறி வருகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. இதனை அடுத்து நியூயார்க் நாட்டில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து வர்த்தக நிறுவனங்களும் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு தொழிலாளர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அவர்கள் கொரோனா தடுப்பூசி முழுவதுமாக செலுத்தியிருக்க வேண்டும் எனவும் கவர்னர் கேத்தி ஹோச்சுல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *