கவாசகி நிறுவனத்தின் புதிய 2021 நின்ஜா 400 மாடல் பைக் அறிமுகம் செய்யப்பட்ட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து மீண்டு வரும், ஆட்டோமொபைல் துறையில் அடுத்தடுத்து புதிய வாகனங்களின் அறிமுகம் நடைபெற்று வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் வாகன விற்பனையில் புதிய உச்சத்தையும் தொட்டு வருகின்றன.
இந்த சூழலில் கவாசகி நிறுவனம் தனது 2021 நின்ஜா 400 பைக் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. பிளாக் மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கும் புதிய பைக்கில், லைம் கிரீன் கிராபிக்ஸ் செய்யப்பட்டு உள்ளது.

கூடுதலாக சிவப்பு நிறத்தில் வைட் கிராபிக்ஸ் மற்றும் ரெட்ரோ ஸ்டைல் டியல் புளூ மற்றும் சில்வர் நிற கிராபிக்ஸ் வாடிக்கையாளரை கவரும் விதமாக அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது . புதிய நிறம் தவிர நின்ஜா 400 மாடலில் 399சிசி பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது யூரோ 5 விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இவைதவிர இந்த பைக்கில் முந்தைய கவாசகி மாடலில் இருந்து வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 2021 கவாசகி நின்ஜா 400 விரைவில் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், bs6 விதிமுறைகள் காரணமாக, இந்த பைக் இந்திய சந்தையில் தற்போதைக்கு அறிமுகம் செய்யப்பட போவதில்லை.




