நான் பாஜகவில் சேரப் போகிறேனா? இயக்குநர் சந்திரசேகர் மறுப்பு

நான் பாஜகவில் சேரப் போகிறேனா? இயக்குநர் சந்திரசேகர் மறுப்பு
பா.ஜ.கவில் தான் சேரப் போவதாக வந்த செய்திகளை இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் மறுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தவகையில் நடிகை குஷ்பு, சுகன்யா, கருணாஸ், விஷால் உள்ளிட்டோர் பா.ஜ.கவில் இணைய போவதாக செய்தி பரவியது. இதை சிலர் மறுத்தனர். இந்நிலையில் நடிகை குஷ்பு மட்டும் காங்கிரஸிலிருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் இயக்குநருர் எஸ்.ஏ.சந்திரசேகர், பா.ஜ.க.வில் இணையபோவதாக சமூகவலைதளங்களில் செய்திகள் உலா வந்தன.ஆனால் இதை சந்திரசேகர் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “நான் பா.ஜ.க.வில் இணைய இருப்பதாக வெளியான செய்தி தவறானது. எங்கிருந்து இது போன்று செய்திகளை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. இதுபோன்ற செய்திகளை யாரும் நம்பவேண்டாம்” என்றார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *