வீட்டில் நடக்கப் போகும் காஜல் அகர்வால் திருமணம்..

வீட்டில் நடக்கப் போகும் காஜல் அகர்வால் திருமணம்..
நடிகை காஜல் அகர்வாலின் திருமணம் அவரது வீட்டில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வார். காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவர்களது திருமணம் வருகிற அக்டோபர் 30-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்காக மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதற்காக ஹோட்டலும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.
ஆனால் தற்போது இந்த திருமணத்தில் ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு பதிலாக காஜல் அகர்வால் வீட்டிலேயே திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே திருமணத்துக்கு வருமாறு நடிகை காஜல் அழைப்பு விடுத்துள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *