பிக்பாஸின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி விட்டது.

பிக்பாஸ் இன்றைய நாளின் முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராஸஸ் கிளிப் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையானவர்கள் நடிகர் ஆரியையும் சுரேஷ் சக்ரவர்த்தியையும் நாமினேஷன் செய்தது போல் காட்டப்பட்டுள்ளது.
ஆரியை பொறுத்தவரை இதற்கு முன் பிக்பாஸ் வெற்றியாளர்களின் அத்தனை குணாதிசயங்களையும் கொண்டுள்ளார். அவரே கூட இந்த சீஸனின் வெற்றியாளராக வர கூட வாய்ப்பிருக்கிறது! கடந்த வாரங்களில் ரியோராஜ் மீது மக்களுக்கு சற்று வருத்தம் இருந்து தான் வருகிறது, இதனால் ஆரிக்கு பிக்பாஸில் வெற்றியடைய நிறைய வாய்ப்பிருக்கிறது.
சுரேஷ் சக்கரவர்த்தி ஆரம்ப நாட்களில் மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருந்தாலும் கடந்த வாரத்தில் மக்களிடையே நற்பெயரை பெற்று விட்டார். மேலும் பிக்பாசை பொறுத்த வரை சண்டை சச்சரவுகளால் டி ஆர் பி ஏற்றுபவர்களே நீண்ட நாட்கள் உள்ளே இருக்க முடியும். இந்த ரீதியில் பார்த்தாலும் இந்த சீசனில் சுரேஷ் சக்கரவர்த்தி மட்டுமே அதற்கு சரியானவர்.
ஆரியும் சுரேஷ் சக்கரவர்த்தியும் களத்தில் இருந்தால் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது கேள்விக்குறி. இன்றைய நிகழ்ச்சியில் அடுத்தடுத்து நாமினேட் செய்யப்படுவர்களை பொறுத்தே இதற்கான பதில் கிடைக்கும்.




