சிறுநீரக கல்லை அகற்ற இனி அறுவை சிகிச்சை வேண்டாம்.. ஜிப்மரில் இலவசமாக நவீன சிகிச்சை

சிறுநீரக கல்லை அகற்ற இனி அறுவை சிகிச்சை வேண்டாம்.. ஜிப்மரில் இலவசமாக நவீன சிகிச்சை

அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகத்தில் உள்ள கற்களை அகற்றும், நவீன சிகிச்சை முறை புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

சமீப காலத்தில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனையாக மாறி உள்ளது சிறுநீரக கல். இதற்கான சிகிச்சை செலவு அதிகமாக இருப்பதும், அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அந்த கற்கள் அகற்ற முடியும் என்பதால் சிகிச்சை செலவும் நடுத்தர மக்களுக்கு எட்டாக் கனியாக உள்ளது. மேலும், அறுவை சிகிச்சை செய்வதனால் கீறல், வடு போன்றவற்றோடு சில மாத கால ஓய்வும் அவசியமாகிறது.

இந்த சூழலில், தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக ஜிப்மரில், ரூ.4 கோடி மதிப்பில் அறுவை சிகிச்சையின்றி சிறுநீரக கற்களை உடைக்கும் புதிய கருவி அமைக்கப்பட்டுள்ளது.
உயர் சிறப்பு மிகுந்த அதிநவீன எலக்ட்ரோ ஷாக்வேவ் லித்தோட்ரிப்ஸ்(டோர்னியர் டெல்டா-111) என்ற கருவி மூலம், உடலின் வெளியே அதிர்வலைகளை செலுத்தி சிறுநீரகங்களில் உண்டாகும் கற்களை உடைக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.

சிறுநீரக கற்களை உடைக்கும் அதிநவீன கருவி குறித்து ஜிப்மரில் பணியாற்றும் டாக்டர் அசோக் சங்கர் படே கூறியதாவது: அறுவை சிகிச்சையின்றி சிறிதளவே வலியுடன் சிறுநீரக கற்களை அகற்ற உரிய சிகிச்சை அளிக்க இந்த இயந்திரம் உதவும். இதன்மூலம் உயராற்றல் மிக்க அதிர்வலைகளால் பெரிய கற்களை சிறிய துகள்களாக உடைத்து சிறுநீர் மூலம் வெளியேற்ற முடியும்.

நோயாளிகளுக்கு மயக்க மருந்து அளித்தல், வடு உண்டாக்குதல் மற்றும் உடலில் எந்த ஒரு கீறலும் இல்லாமல் இந்த சிகிச்சையில் சில மணிநேரத்தில் நோயாளிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர்.

தற்போதைய நவீன எந்திரத்தால் சிறுநீரக பாதையில் உள்ள கற்கள் மற்றும் சிறுநீர்ப்பையில் இருக்கும் கற்களையும் அகற்ற முடியும். கணைய கற்களையும் உடைக்கலாம் என அவர் கூறினார்.

ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் பேசும்போது, இந்த இயந்திரத்தின் மூலம் சிறுநீரக கல்லை உடைக்கும்போது கதிர்வீச்சு அபாயம் குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை இலவசமாக வழங்கப்படும் எனவும், மற்றவர்கள் குறைந்த கட்டணத்தில், அதாவது ரூ.4 ஆயிரம் செலுத்தி இந்த சிகிச்சையை ஜிப்மரில் பெற்றுக்கொள்ளலாம்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *