மருத்துவ கல்லூரியில் சேர முடியாத மாணவர்கள் கல்விக்கட்டணத்தை தி.மு.க. ஏற்கத் தயார்-மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மருத்துவ கல்லூரியில் சேர முடியாத மாணவர்கள் கல்விக்கட்டணத்தை தி.மு.க. ஏற்கத் தயார்-மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மருத்துவ கல்லூரியில் சேர முடியாத மாணவர்களின் கல்விக்கட்டணத்தை தி.மு.க. ஏற்கத் தயார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

மருத்துவ கல்விக் கட்டணம்
அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படுவதால் அவர்களால் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து ஏற்கனவே முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.
தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர் யுவன்ராஜ், கட்டணம் செலுத்த இயலாததால் கேட்டரிங் பணிகளுக்குச் சென்றுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

அரசுப்பள்ளி மாணவர்கள்
திருவண்ணாமலை மாணவிகள் கே.பிரித்திஷா, கு.விஜயலட்சுமி, எஸ்.பவானி ஆகியோரும் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் தவிப்பதாகத் தகவல் வந்திருக்கிறது.
இதுபோல மேலும் பல அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவே தகர்ந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

தி.மு.க. ஏற்கத் தயார்
அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சரிசெய்ய சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது ஏன்? அரசு நினைத்தால் செய்ய முடியும். இல்லாவிட்டால், மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடங்களையாவது ஒதுக்கித் தாருங்கள். முன்னர் அறிவித்தபடி தி.மு.க. அந்தக் கட்டணத்தை ஏற்கத் தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *