வகுப்பறையில் திருமணம் செய்து கொண்ட ஸ்டூடண்ட்ஸ் : அதிர்ச்சியில் பேரண்ட்ஸ்…

வகுப்பறையில் திருமணம் செய்து கொண்ட ஸ்டூடண்ட்ஸ் : அதிர்ச்சியில் பேரண்ட்ஸ்…
ஆந்திராவில் பள்ளி வகுப்பறையிலேயே மாணவன் ஒருவர் மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
Stundets Marriage In Classroom

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் தற்போது திறக்கப்பட்டு, மீண்டும் வகுப்புகள் நடைபெற தொடங்கி உள்ளன. ஆந்திராவிலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. கொரோனா அச்சம் காரணமாக, பள்ளிக்கு சில மாணவ, மாணவிகள் மட்டுமே வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில் உள்ள ஒரு அரசு ஜூனியர் கல்லூரி என்றழைக்கப்படும் மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கொரோனவிற்கு பிறகு திறக்கப்பட்டுள்ள இந்த பள்ளியில் தான் தற்போது அதிர்ச்சியூட்டும் விஷயம் ஒன்று அரங்கேறியுள்ளது.

இந்தப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனும், மாணவியும் காதலித்து வந்துள்ளனர். கொரோனா காரணமாக நீண்ட நாட்கள் இருவரும் சந்திக்க முடியாமல் போனது. தற்போது பள்ளி திறக்கப்பட்டதால், இந்த காதல் ஜோடி உற்சாகமடைந்தனர். மீண்டும் ஊரடங்கு போன்று எந்த நிகழ்வும் நம்மை பிரித்து விடக்கூடாது எனக் கருதிய இந்த ஜோடி, விபரீதமான ஒரு முடிவை எடுத்தது.

Andhra marriage in Classroom

அதன்படி, வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் அந்த மாணவர், மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். இதை மற்றொரு மாணவி செல்ஃபோனில் படம் பிடித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது  இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுபற்றி அறிந்த பள்ளி முதல்வர், திருமணம் செய்துக்கொண்ட மாணவ, மாணவியையும், புகைப்படம் எடுத்த மாணவி உள்ளிட்ட மூவரையும் பள்ளியில் இருந்து நீக்கியுள்ளார்.

பள்ளியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் பெற்றோர்களிடையே பல்வேறு கேள்விகளையும், குழப்பத்தையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள் : ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் :டி.ஆர்.எஸ் முன்னிலை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *