சோனியாகாந்திக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் 74வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அவருக்கு நாட்டின் பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நவீன, மதச்சார்பற்ற இந்தியாவை கட்டமைத்ததில் சோனியாவின் பங்கு மிகவும் முக்கியமானது. சோனியா காந்தி மேலும் பல ஆண்டுகள் மக்கள் சேவை ஆற்ற வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




