நல்லா இருக்கேன்: மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

நல்லா இருக்கேன்: மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்

ஐதராபாத்தில் சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சோர்வு காரணமாக ஐதராபாத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு 28ஆம் தேதி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
ஒரு வாரம் கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும், கொரோனா தாக்கும் அபாயமுள்ள எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என ரஜினிக்கு மருத்துவர்கள் இரண்டு அறிவுரைகள் வழங்கினர்.

இதனைக் காரணம் காட்டி, தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்துவிட்டார் ரஜினிகாந்த். அதன்பிறகு அவர் வெளியே எங்கேயும் செல்லவில்லை. ரஜினிகாந்த் உடல்நலம் எப்படி இருக்கிறது என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் நல்ல உடல்நிலையோடு இருப்பது ரஜினி பேசி வெளியிட்ட வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

அப்பல்லோ மருத்துவர்களுக்கு ரஜினி வெளியிட்ட வீடியோவில், “மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நல்ல உடல்நலனோடும், மன நலனுடனும் இருக்கிறேன். அப்பல்லோ சிறப்பாக என்னை கவனித்துக்கொண்டது என நன்றி தெரிவித்தார்.


இதற்கு அப்பல்லோ, தலைவா நீங்கள் பேசும்போது உலகம் கேட்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரத்திற்கு சேவை செய்ய 2020 எங்களுக்கு வாய்ப்பளித்தது. அவரது கருணை மிக்க வார்த்தைகளுக்கு அப்பல்லோவின் நன்றி. 2021 ரஜினிக்கு ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் வளமான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *