போக்குவரத்து நெருக்கடி (டிராஃபிக் ஜாம்) ஏற்பட்டு சிக்கிய ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு செல்ல தாமதம் ஏற்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை :
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள், அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்ற காரணத்தால் நெல்லை மாநகராட்சி முழுவதும் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகள் முழுவதும் சேரும் சகதியுமாக உள்ளன.
நெல்லை சந்திப்பு முதல் பேட்டை வழுக்கோடை வரை சுமார் 5 கிலோ மீட்டருக்கு கடும் டிராஃபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமலும், சரி செய்ய முடியாமலும் போலீசார் தவித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு பொருட்கள் வாங்க வருவோர் என பலரும் சாலையை கடக்க சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் செலவிட வேண்டியுள்ளதால் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
Read more – மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது
இந்நிலையில், இந்த டிராஃபிக் ஜாமில் இன்று காலை ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கியது. சிகிச்சைக்கு செல்ல தாமதம் ஏற்பட்டதால் மாரடைப்பு நோயாளி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.