“புதுச்சேரியில் வெற்றி பெறவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன்”

“புதுச்சேரியில் வெற்றி பெறவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன்”

புதுச்சேரியில்  30 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை எனில் இந்த மேடையிலே தற்கொலை செய்து கொள்வேன் என்று திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் எம்.பி ஜெகத்ரட்சகன் பேசியிருக்கிறார்.

புதுச்சேரி 100 அடி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதுச்சேரி திமுக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 2016 திமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்த சூழலில் கடந்த 6 மாதமாக புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்து வந்த திமுகவினர் காங்கிரசுடன் இணக்கமாக போகாமல் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திமுக தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமைப்போம் என்ற நோக்கத்தோடு திமுக தலைமையின் உத்தரவின்படி புதுச்சேரியில் திமுகவினர் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது திமுக செயல்வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ  மற்றும் வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்பி சிவக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் புதுச்சேரி திமுக மேலிட பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.   திமுக மேலிட பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பி பேசும்போது, எங்கும் பார்த்தாலும் கறுப்பு சிவப்பு வண்ணம் தெரிகிறது. கலைஞருக்கு அதிகம் பிடித்த ஊர் புதுச்சேரி. புதுச்சேரியில் திமுக தலைமையில் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்த அவர் புதுச்சேரியில் 30 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை எனில் இந்த மேடையிலே தற்கொலை செய்து கொள்வேன் எனவும் தெரிவித்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *