பிப்ரவரி இறுதி வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு?

பிப்ரவரி இறுதி வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு?

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளின் ஆயுட் காலம் விரைவில் நிறைவடைய உள்ளதால் அம்மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் நிறைவு பெரும் நிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் மே 5-ம் தேதி பள்ளிகளில் பொதுத்தேர்வு தொடங்குவதால் அதற்கு முன்பாக ஏப்ரல் மாதத்திலேயே தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் முழு கூட்டம் பிப்ரவரி 20 மற்றும் 21-ம் தேதிகளில் நடைபெறும் என்றும் அந்த கூட்டத்தில் தேர்தல் தேதி குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியுள்ளதால் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *