‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி… அதிரடியாக அறிவித்த படக்குழு…!!!

‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி… அதிரடியாக அறிவித்த படக்குழு…!!!

நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தலைவி’. இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார் .

இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார் ‌ . மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் .

இந்த படத்திற்காக நடிகை கங்கனா தமிழில் பேசவும், பரதநாட்டியம் ஆடவும் கற்றுக்கொண்டார் . நடிகை கங்கனா இன்று ஜெயலலிதாவின்பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் . இந்நிலையில் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வருகிற ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *