”திடீரென்று கேட்ட பயங்கர வெடிச் சத்தம்”… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

”திடீரென்று கேட்ட பயங்கர வெடிச் சத்தம்”… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலிபோர்னியாவில் உள்ள வீட்டில் நடந்த வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கலிபோர்னியாவில் உள்ள ஒன்றாரியோ என்ற இடத்தில் அமைந்துள்ள வீட்டில் திடீரென்று பயங்கர வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்களும் மருத்துவ உதவி குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த வெடி விபத்தில் வீட்டில் வசித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு குதிரையையும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்கள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வெடிவிபத்து குறித்து வீடியோ ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *