Thursday, September 24, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021

ஆயிரம் விளக்கில் தீபந்தமாக எரியும் குஷ்பு…

mukesh by mukesh
March 31, 2021 12:08 PM GMT+5:30

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவிற்கு நாளுக்கு நாள் மக்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

திமுகவினர் பெண்கள் குறித்து தவறாக பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானதையடுத்து பெண்ணியம், சம உரிமை பேசும் அக்கட்சியின் முகமூடி மக்கள் மத்தியில் கிழிய ஆரம்பித்துள்ளது. அதேபோல் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதன் முறையாக களம் கண்டு, தினமும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக வேட்பாளர் குஷ்புவின் அணுகுமுறையும், பேச்சும் அனைவரையும் கவர்ந்து வருகிறது. எதிர்க்கட்சியினரையோ, தன்னை எதிர்த்து போட்டியிடுபவரையோ பற்றி அவதூறாக ஒரு வார்த்தை கூட பேசாமல், சிரித்த முகத்துடன் ‘உங்கள் சகோதரிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’ என வாக்கு சேகரித்து வருகிறார் குஷ்பு.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவு — யார் யார் களத்தில்?

வைரஸ் தொற்றால் காய்ச்சல்; இன்னும் 2–3 நாட்கள் வீட்டில் ஓய்வு — மு.க.ஸ்டாலின் விளக்கம்

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

நேற்று, ஆயிரம் விளக்கு தொகுதிக்குள் வாக்கு சேகரிக்க சென்ற குஷ்புவிற்கு திரளான இஸ்லாமிய பெண்கள் தடபுடலாக வரவேற்பு கொடுத்தது, அரசியல் வட்டாரங்களில் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. முதன் முறையாக தேர்தலில் போட்டியிடும் ஒரு பெண் வேட்பாளருக்கு மக்களிடம் இப்படியொரு வரவேற்பா? என மலைக்க வைத்துள்ளது. அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த எழிலனும், ஆ.ராசாவின் ஆபாச பேச்சால் சற்றே சுணக்கம் அடைந்துள்ளார்.

வீடு, வீடாக சென்று கையெடுத்து கும்பிட்டால் வாக்கு போட்டுவிடுவார்கள் என்ற மன கணக்கு எல்லாம் போடாத குஷ்பு, வேட்புமனு தாக்கலுக்கு முன்பு ஒரு குழுவை வைத்து அப்பகுதி மக்களின் குறைகளை ஆராய்ந்தார். அதன் பின்னர் தினமும் வாக்கு சேகரிக்க செல்லும் பகுதிகளில் எல்லாம் அப்பகுதி மக்களின் குறைகள் என்ன என்பதை நேரில் கேட்டு அறிந்து கொண்டார். ஆயிரம் விளக்கு தொகுதியில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் சுகாதாரம், மாநகராட்சி பள்ளி மேம்பாடு, சாலை, தெருவிளக்கு, பாதாளசாக்கடை, முறையான குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளோடு, பல அசத்தல் வாக்குறுதிகளையும் கொடுத்துள்ளார் குஷ்பு.

ஆயிரம் விளக்கு தொகுதிக்காகவே குஷ்பு தயாரித்துள்ள தேர்தல் அறிக்கை சோசியல் மீடியாவில் செம்ம பிரபலமாகி வருகிறது. இதில் என்ன ஆச்சர்யம் என்று நீங்கள் நினைக்கலாம் மேலே சொல்லியுள்ளவைகள்தான் சென்னை மக்களின் மிக மிக அவசியமான, அத்தியாவசியமான தேவை, அதை அரசிடம் முறையிடுவோம் வழங்கவில்லை என்றால் என் தனிப்பட்ட பணத்தில் செய்து கொடுக்கிறேன் என உத்தரவாதம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் செல்வ செழிப்பானவர்கள் கூட ” என் சொந்த பணத்தில் செய்கிறேன்” என யாரும் இதுவரை தெரிவித்திருக்காதபோது, குஷ்புவின் இச்செயல் பேசுப்பொருளாக அமைந்துள்ளது.

பெண்களின் ஆதரவும், மாணவர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் குஷ்புவிற்கு கூடிக்கொண்டே வரும் நிலையில், சிவாஜி கணேசன் குடும்பத்தினரும் அவருக்கு ஆதரவளித்துள்ள கூடுதல் பலமாக அமைந்துள்ளது. காரணம் சிவாஜி கணேசன் 70 களில் தஞ்சாவூரில் இருந்து அவரது சொந்தகள் பலரை சென்னைக்கு அழைத்து வந்து ஆயிரம் விளக்கு பகுதியில் குடியமர்த்தினார். எனவே அவர்களுடைய வாக்கும் குஷ்புவிற்கு கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மேலும் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவை கோரவும் முயற்சி செய்து வருகிறார். வெளிப்படையாக ஆதரவை தெரிவிக்காமல் தனக்கு நெருக்கமானவர்களிடம் எனக்கு வாக்களிக்க கூறும்படியும் அன்பு கட்டளையிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜக என்ற கட்சி என்பதை தாண்டி தனது தனிப்பட்ட செல்வாக்கில் தேர்தல் ரேஸில் அடித்து முன்னேறுகிறார் குஷ்பு என்றே சொல்லலாம். வேட்பாளர்கள் அறிவித்தபோது சமூக வலைதளம், தொலைக்காட்சியில் கூறப்பட்ட கருத்துகணிப்புகள் தற்போது தலைகீழாக மாறியுள்ளது என்றே சொல்லலாம்.

நீ போகலாம் என்று சொல்பவன் எஜமான்; வா போகலாம் என சொல்பவன் தலைவன் என்பது போல, தனக்கானவர்களை தன்னுடனே குஷ்பு அழைத்து சொல்லும் பாங்கு, மேலும் தலைவியாக, ஆயிரம் விளக்கில் தலையில் வெற்றி வாகை பூவான தாமரையை சூடவுள்ளார் என்று அரசியல் கணிப்பாளர்கள் கூறிவருகின்றனர்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

‘ அம்மா ‘ என்று கதறி அழுத ராஜேந்திர பாலாஜி… அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டுவர உறுதி

Next Post

அடிமை ஆட்சியில் இருந்து நம்மை மீட்கும் தேர்தல் இந்த தேர்தல்… அதிரடியாக பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜய் வசந்த்

Next Post

அடிமை ஆட்சியில் இருந்து நம்மை மீட்கும் தேர்தல் இந்த தேர்தல்... அதிரடியாக பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜய் வசந்த்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

கபடியில் பதக்கம் உறுதி செய்த இந்தியா!

September 23, 2026 4:46 PM GMT+5:30

இந்தியாவை நோக்கும் உலக முதலீடு; 100 நாட்களில் 164 பதிவுகள்!

September 23, 2026 3:02 PM GMT+5:30

லஞ்சமும் டிஜிட்டல் மயம்?

September 23, 2026 12:52 PM GMT+5:30

மீண்டும் வேகம் எடுக்கும் சேவைத்துறை!

September 23, 2026 11:08 AM GMT+5:30

வேகம் எடுக்கும் ‘தார்’ விற்பனை!

September 22, 2026 11:26 PM GMT+5:30

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இரண்டு நாள் ஆலோசனை; நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய விவாதம்

September 22, 2026 11:13 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version