இங்கிலாந்து அபார வெற்றி வெஸ்ட்இண்டீஸ் பரிதாபம்!!

இங்கிலாந்து அபார வெற்றி  வெஸ்ட்இண்டீஸ் பரிதாபம்!!
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது

மேற்கிந்திய தீவுகள் அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற என்ற 399 ரன்கள் இலக்காக வைக்கப்பட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்சில் மே.இ.தீவுகள் அணி படு சொதப்பலாக ஆடி தொடரை இழந்தது அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி உள்ளனர் என்பதால் அந்த அணி 129 ரன்களுக்குசுருண்டது

இங்கிலாந்து தரப்பில் கிரிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளையும் பிராட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸ்சில் அரைசதம், முதல் இன்னிங்ஸ்சில் 6 விக்கெட்,இரண்டாம் இன்னிங்ஸ்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்ட பிராட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

மேலும் தொடரில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இங்கிலாந்து தொடர் நாயகனாக பிராட்டும் மேற்கிந்திய அணி முதல் போட்டியில் வெற்றிபெற காரணமாக திகழ்ந்த ரோஸ்டன் சேஸ் அந்த அணி தரப்பிலும் தொடர் நாயகன் விருது பெற்றனர்.

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 369/10

போப்: 91

பட்லர்: 67

பிராடு: 62

பர்ன்ஸ்: 57

மே.இ.தீவுகள் முதல் இன்னிங்ஸ்: 197/10

ஹோல்டர்: 46

டெளரிச்: 37

கேம்பெல்: 32

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 226/2 டிக்ளேர்

பர்ன்ஸ்: 90

ரூட்: 68 அவுட் இல்லை

சிப்லே: 56

மே.இ.தீவுகள் 2வது இன்னிங்ஸ்: 129/10

ஹோப்: 31

பிளாக்வுட்: 23

ஒரு நெருக்கடியான சூழலில், இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்ட விண்டீஸ் அணி, அங்கு டெஸ்ட் தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முதல் டெஸ்ட்டில் மட்டுமே ஆக்ரோஷம் காட்டிய அந்த அணி, அடுத்த 2 போட்டிகளிலும் எளிதாக சரணடைந்துவிட்டது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *