Monday, September 21, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

மிஸ்ஸஸ் ஸ்ரீலங்கா பட்டம் வென்ற அழகி! 2 நிமிடத்தில் நடந்த டுவிஸ்ட்

April 9, 2021

அழகிப் போட்டியில் பட்டம் வென்றவராக தேர்வு செய்யப்பட்ட பெண்ணுக்கு, கிரீடம் சூட்டப்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் கீரிடம் பறிக்கப்பட்டது. இலங்கையில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கை தலைநகர் கொழும்புவில், திருமணமான பெண்களுக்கு நடந்த, மிஸ்ஸஸ் ஸ்ரீலங்கா அழகி போட்டியில் கலந்து கொண்ட பெண்களில், வெற்றியாளர் கடந்த 4ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். பல சுற்றுகளின் முடிவில், புஷ்பிகா டி சில்வா என்ற பெண், பட்டத்துக்கு உரியவர் என அறிவிக்கப்பட்டார். அப்போது தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு ‘மிஸ்ஸஸ் ஸ்ரீலங்கா’ பட்டம் வென்ற முன்னாள் அழகியான கரோலின் ஜூரி, மேடையில் மைக்கை எடுத்து பேச துவங்கினார்.

பிரெஞ்சு ஓபனில் போலந்து வீராங்கனை சாம்பியன்!!!

புஷ்பிகா திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பதால், அவருக்கு இந்த பட்டத்தை வெல்ல தகுதியில்லை எனக்கூறி பட்டம் சூடிய அடுத்த சில நிமிடங்களில் வேகமாக கிரீடத்தை புஷ்பிகாவிடமிருந்து பறித்தார். மேடையில் இருந்த 2வது இடம் பிடித்த பெண்ணுக்கு அந்த கிரீடத்தை அவர் அணிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பிகா, அழுதபடி மேடையை விட்டு வெளியேறினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், புஷ்பிகா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதும், ஆனால் விவாகரத்து பெறவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் அவருக்கு ‘மிஸ்ஸஸ் ஸ்ரீலங்கா’ பட்டம் அளிக்கப்பட்டது. மேலும் அழகிப் போட்டியை நடத்திய அமைப்பு, புஷ்பிகாவிடம் மன்னிப்பும் கேட்டிருக்கிறது. ‘திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண்களுக்காக நான் குரல் எழுப்ப உள்ளேன்’ என புஷ்பிகா கூறியிருக்கிறார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

3,000 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதையுண்ட தங்க நகரம்..! எகிப்தில் தோண்டத்தோண்ட கிடைத்த அதிசயம்..!

Next Post

DRDO வேலைவாய்ப்புகள் 2021

Next Post

DRDO வேலைவாய்ப்புகள் 2021

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

தமிழகத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; குற்றாலத்தில் அதிகரித்த நீர்வரத்து – கொடைக்கானல் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கு

September 21, 2026

ஆசிய விளையாட்டு நீச்சலில் அசத்திய ரிஷப் தாஸ்; 100 மீ. பேக்ஸ்ட்ரோக் இறுதியில் 6-வது இடம்

September 20, 2026

டாடா குழுமத்தில் உச்சகட்ட மோதல்; சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது – Tata Trusts

September 20, 2026

மேல்மா சிப்காட் விவகாரத்தில் திருப்பம்; 22.16 ஹெக்டேர் நில எடுப்பு அறிவிக்கையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

September 19, 2026

“ஆசிய விளையாட்டில் முதல் பதக்கத்தை நெருங்கும் இந்தியா; புதிய விளையாட்டான டெக்பாலில் குயிம்சி அசத்தல்!”

September 19, 2026

நிலாவில் புதிதாக உருவான பிரம்மாண்ட பள்ளம் — NASA கண்டுபிடிப்பு!

September 18, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version