
மறைந்த நடிகர் விவேக்கிற்கு இறுதிச்சடங்குகளை மகன் ஸ்தானத்தில் இருந்து அவரது மகள் அஸ்வினி செய்தார்.

இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு மேல் துவங்கியது. ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்களிடையே நடிகர் விவேக்கின் பூத உடல் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து அவருக்கு தேவையான இறுதிச் சடங்குகளை மகள் அஸ்வினி மகன் ஸ்தானத்தில் இருந்து செய்தார்.
நடிகர் விவேக் உடலுக்கு தமிழக காவல்துறையினர் 78 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர்.
மேலும், விவேக்கின் உடல், விருக்கம்பக்கத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மேட்டுக் குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.




