Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!!

September 20, 2021

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று (செப்டம்பர் 19) இரவு தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

இதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் மற்றும் டு பிளிசிஸ் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே டு பிளிசிஸ் (0) ரன் ஏதும் எடுக்காமல் டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த மொயீன் அலி (0) இரண்டாவது ஓவரில் மில்னே பந்து வீச்சில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். மூன்றாவது ஓவரில் அம்பத்தி ராயுடு ரன் ஏதும் எடுக்காத நிலையில், காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா (4), கேப்டன் தோனி (3) என சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து நின்று ஆடி அரை சதத்தைக் கடந்தார்.

அடுத்து வந்த ஜடேஜா 33 பந்துகளில் 26 ரன்களில் எடுத்த நிலையில், குருணால் பாண்டியா வீசிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். இறுதி ஓவர்களில் பிராவோ 3 சிக்சர்களைப் பறக்கவிட்டு 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிவரை நிலைத்து நின்று ஆடிய ருதுராஜ் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக போல்ட், மில்னே மற்றும் பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் சார்பில் குயிண்டான் டி காக் மற்றும் அன்மோல்பிரித் சிங் ஆகியோர் களமிறங்கினர். அந்த ஜோடியில் அதிரடியாக ரன் சேர்த்த டி காக் 17 (12) ரன்களும், அவரைத் தொடர்ந்து அன்மோல்பிரித் சிங் 16 (14) ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 (7) ரன்களும், இஷான் கிஷன் 11 (10) ரன்களும், கேப்டன் பொல்லார்டு 15 (14) ரன்களும், குருணால் பாண்டியா 4 (5) ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

கடைசி ஒவரில் வெற்றிபெற 23 தேவைப்பட்டநிலையில் ஆடம் மில்னே 15 (15) ரன்களும், அடுத்து களமிறங்கிய ராகுல் சாஹர் (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுரவ் திவாரி 50 (40) ரன்களும், பும்ரா 1(2) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பின்னர் மும்பை அணி 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக பிராவோ மூன்று விக்கெட்டுகளும், தீபக் சாஹர் இரண்டு விக்கெட்டுகளும், ஹேசில்வுட் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்ச் அணியும் மோதவிருக்கின்றன.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் ரிலீஸ் எப்போது?

Next Post

இதுவே கேப்டனாக கடைசி போட்டி… ஆர்.சி.பி கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகல்

Next Post

இதுவே கேப்டனாக கடைசி போட்டி… ஆர்.சி.பி கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version