புதுச்சேரியில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,புதுச்சேரியில் 5 நகராட்சிகள்,10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு அக்.21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனவும்,முதல் முறையாக இத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி,முதற்கட்டமாக காரைக்கால் ,மாஹே,ஏனாம் நகராட்சி கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்.21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இரண்டாவது கட்டமாக புதுச்சேரி நகராட்சி ,உழவர்கரை பஞ்சாயத்துகளில் அக்.25 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலும், 3-வது கட்டமாக புதுச்சேரியில் உள்ள மற்ற அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் அக்டோபர் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 31 ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.