‘இங்க சீனே வேற’ விஜய் டிவியை வெறுப்பேற்றிய சர்வைவர் டீம்.. வைரல் வீடியோ!

‘இங்க சீனே வேற’ விஜய் டிவியை வெறுப்பேற்றிய சர்வைவர் டீம்.. வைரல் வீடியோ!

விஜய் டி.வி.யில் 4 சீசன்களை கடந்து 5வது சீசனை ஆரம்பிக்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அக்டோபர் 3ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே அந்த நிகழ்ச்சியை ஓரங்கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் சன் டிவி மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியையும், ஜீ தமிழ் சர்வைவர் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

அதிலும் சர்வைவர் நிகழ்ச்சியை எப்படியாவது முன்னிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டுமென ஜீ தமிழ் தொலைக்காட்சி முயற்சித்து வருகிறது. காடர்கள், வேடர்கள் என இரு அணியாக பிரிக்கப்பட்டு, உடல் வலிமை மற்றும் அறிவு சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சர்வைவர் ஷோ பிக்பாஸ் அளவிற்கு சாமானிய மக்களிடம் சென்றடையவில்லை என்பது தெரியவருகிறது.

இந்நிலையில் சற்று முன்பு சர்வைவர் ஷோவிற்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்து சர்வைவர் நிகழ்ச்சியின் வேடர்கள் அணியினர் பேசியுள்ளது வைரலாகி வருகிறது. வேடர்கள் அணியின் இந்த வார கேப்டனான அம்ஜத் கான் தனது சக டிரைப்ஸிடம், “ தினமும் காலையில் பாட்டு போடுவாங்க, ஆடி முடிச்சிட்டு, பாத்திரம் கழுவிட்டு சமைச்சி சாப்பிட்டு, ஜாலியா ஏசி ரூமில் உட்கார்ந்து கிசுகிசு பேசிட்டு போவாங்க. ஆனால் இங்க முழு சிஸ்டமும் வேற மாதிரி இருக்கு” என பேசியுள்ளார். இந்த புரோமோ வீடியோ பிக்பாஸ் ரசிகர்களை சற்றே வெறுப்பேற்றும் விதமாக அமைந்துள்ளது. இதோ அந்த வீடியோ…

https://www.youtube.com/watch?v=mQRhfpx7L_8
author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *