31 ஆயிரமாக உயர்ந்த தினசரி தொற்று எண்ணிக்கை!!

31 ஆயிரமாக உயர்ந்த தினசரி தொற்று எண்ணிக்கை!!

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நாள்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது.


முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 31,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,35,63,421 என உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 282 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,46,050 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,28,15,731 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,01,640 பேர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *