தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை… கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!!

தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை… கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!!

மீண்டும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாற்றங்களுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் மற்றும் சாமானிய மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இதற்கிடையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99.15 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 94.17 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21 காசுகள் உயர்ந்து ரூ.99.36க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.94.45க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *