விவசாயிகள் கொலை விவகாரம்… ஆஜராக கோரி ஆஷிஷ் மிஸ்ராவிற்கு சம்மன்!!

விவசாயிகள் கொலை விவகாரம்… ஆஜராக கோரி ஆஷிஷ் மிஸ்ராவிற்கு சம்மன்!!

நாளை காலை 11 மணிக்குள் ஆஜராக கோரி ஆஷிஷ் மிஸ்ரா இல்லத்தில் 2வது சம்மன் ஒட்டப்பட்டது.

டெல்லி, உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் பேரணியின் போது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ராவின் மகன் கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். பின்னர் அதனால் ஏற்பட்ட கலவரத்தினால் உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவரும், மேலும் 4 பேர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், வன்முறை தொடர்பாக உத்திரபிரதேச போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வரும் நிலையில் இணை அமைச்சர் மகன் ஆசிஸ் மிஸ்ரா இன்று காலை 11 மணிக்கு ஆஜராக கோரி நேற்றைய தினம் உ.பி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகத காரணத்தினால், மீண்டும் 2வது முறையாக ஆஜராக கோரி சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. உத்திரபிரதேர் மாநிலத்தில் உள்ள அவரது இல்லத்தில் உ.பி போலீசார் நாளை காலை 11 மணிக்கு ஆஜராக கோரி இரண்டாவது சம்மன் ஒட்டியுள்ளனர்.

இவ்விவகரத்தில் இன்றைய உச்சநீதிமன்ற விசாரணையின் போது, உ.பி அரசின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹாரிஸ் சால்வே தரப்பிலும் நாளை வரை ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு இருந்தார். மற்றொரு பக்கம், ஆஷிஷ் மிஸ்ராவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்து வைக்கப்பட்டுள்ளதாவும், அதனால் அவர் எங்கு உள்ள என்பதை எங்களால் கண்டு பிடிக்க இயலவில்லை! ஆனால் இறுதியாக அவரது செல்போன் இந்திய-நேபாள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இருந்துள்ளது என்பதை உ.பி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *