தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிகரித்து வந்தது.

இந்தியாவில் தங்கத்தில் முதலீடு என்பது ஆடம்பரம் என கருதப்படாமல் சேமிப்பாகவே கருதப்பட்டு வருகிறது. இதனால் தங்கத்தில் ஏற்படும் மாறுதல்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4,505க்கும் வெள்ளி ஒரு கிராம் ரூ.66.60க்கும் விற்பனையாகி வருகிறது.
மீண்டும் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.36 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகி வருவது சாமானிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.




