கேரளாவில் மழை-வெள்ளம்: சமையல் அண்டாவில் அமர்ந்து திருமணம் செய்து கொண்ட தம்பதி!!

கேரளாவில் மழை-வெள்ளம்: சமையல் அண்டாவில் அமர்ந்து திருமணம் செய்து கொண்ட தம்பதி!!

கேரளாவில் சமையல் பாத்திரமான அண்டாவில் அமர்ந்து வெள்ளத்தை கடந்து தம்பதியினர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அம்மாவட்டத்தை சேர்ந்த புதுமண தம்பதியினரை வெள்ளம் சூழ்ந்த இடத்திலிருந்து மண்டபத்திற்கு அழைத்து செல்வதற்கு புதுமையாக பெரிய அலுமினிய சமையல் பாத்திரத்தில் அமரவைத்து உடைகள் நனையாமல் பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் மண்டபத்தில் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் இருவீட்டாரின் முக்கியமான குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *