தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை!!

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை!!

மத்திய அரசு சார்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 102 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி, நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் இதுவரை 98 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் இந்த எண்ணிக்கை இன்னும் ஒரு சில நாட்களில் 100 கோடி என்ற எண்ணிக்கையை தொட இருக்கிறது. அதே நேரத்தில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டு கொண்டிருக்கிறது.

மேலும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 1,02,05,09,915 டோஸ்கள் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மாநிலங்கள் வசம் 10,42,38,220 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் இருப்பு உள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *