அடுத்தடுத்து புதிய திரைப்படங்களில் கமிட் ஆகி வரும் சமந்தா!!

அடுத்தடுத்து புதிய திரைப்படங்களில் கமிட் ஆகி வரும் சமந்தா!!

நடிகை சமந்தா தனது மண வாழ்க்கை முறிவிற்கு பிறகு சிறிதும் சோர்ந்து விடாமல் அடுத்தடுத்து புதிய திரைப்படங்களில் கமிட் ஆகி வருகிறார். இளம் பெண்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக அவர் விளங்குகிறார்.

இந்த தசரா பண்டிகையில் சமந்தா பெயரிடப்படாத இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதை தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகவிருக்கின்றன.

சமந்தா நடிக்கும் இந்த இரண்டு திரைப்படங்கள் பற்றிய அறிவிப்பும் அதிகாரபூர்வமாக தசரா பண்டிகை அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஒரு திரைப்படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் பிரகாஷ் பாபு, பிரபுவின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் வித்தியாசமான திரைக்கதையாக உருவாக உள்ளதாம்.

மற்றொரு படம் நாயகிக்கு கதையில் முக்கியத்துவம் தரும் படமாக உருவாகிறது. இந்தப் படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இயக்க, சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார். இவர் ஜெயம் ரவி நடித்த ‘மழை’ படத்தைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் இந்தப் படம் பற்றிக் கூறுகையில், “இந்தப் படம் பற்றி என்னால் இப்போது எதுவும் கூற முடியாது. ஆனால், இந்தப் படத்தின் கதை தனித்துவமானது என்பதை மட்டும் என்னால் நிச்சயமாக கூற முடியும்.

சமந்தாவை இந்தப் படத்தில் நடிக்க வைப்பது என்பது இயக்குனர்கள் உட்பட எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு. படத்தின் கதாபாத்திரத்துக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று நான் உறுதியாக நம்பினேன். இயக்குநர்களும் அதைத்தான் நினைத்தார்கள்.
கதை தயாரான உடனேயே நாங்கள் சமந்தாவிடம் கூறினோம். அவரும் கதை பிடித்து போய் உடனே ஒப்புக்கொண்டார். சமந்தாவை இந்தப் படத்தில் ஒரு புது அவதாரத்தில் காணலாம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. படத்தின் நடிகர் மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *