பா. ரஞ்சித் இயக்கத்தில் அப்பா… மாரி செல்வராஜ் இயக்கத்தில் மகன்… அசத்தும் இருவர் காம்போ!!

பா. ரஞ்சித் இயக்கத்தில் அப்பா… மாரி செல்வராஜ் இயக்கத்தில் மகன்… அசத்தும் இருவர் காம்போ!!

நடிகர் விக்ரம் இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான், அஜய்ஞானமுத்து இயக்கும் கோப்ரா ஆகிய படங்களில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் மகான் திரைப்பட படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது.

கோப்ரா படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுவும் விரைவில் முடிந்துவிடும் என்கிற நிலையில் அவர் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்திருக்கிறது. அந்த வகையில் பா.இரஞ்சித் இயக்கும் புதியபடத்தில் விக்ரம் நடிக்க விருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

பா.இரஞ்சித் இப்போது நட்சத்திரம் நகர்கிறது என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்துவிட்டு சியான் விக்ரம் நடிக்கும் படத்தைத் தொடங்க உள்ளாராம். இந்தப்படத்தை ஸ்டுடியோ கீரின் நிறுவனம் சார்பில் ஞானவேல் தயாரிக்க உள்ளார் எனவும் மிக விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

அதே நேரத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டினை மையப்படுத்திய திரைப்படமாக இது இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *