மாற்றம் செய்யப்பட்டது ‘பேஸ்புக்’நிறுவனத்தின் பெயர்: தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாற்றம் செய்யப்பட்டது ‘பேஸ்புக்’நிறுவனத்தின் பெயர்: தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உலகின் பிரபல சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற மார்க் ஜுக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் கனெக்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி மாநாட்டில் பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உரையாற்றினார்.

அப்போது பேசும் போது, சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ‘பேஸ்புக்’கின் தலைமை நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. புதிதாக “மெட்டா” என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதன் ஆப்களின் பெயர்களில் எவ்வித மாற்றமும் இல்லை. குறிப்பாக பேஸ்புக் செயலி பேஸ்புக் என்றே அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக பிரச்னைகளுடன் போராடி நிறைய கற்றுக் கொண்டோம், கற்றுக் கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது. அதே சமயம் தங்கள் ‘ஆப்’களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை எனவும், அவர் மார்க் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *