Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடு: கடற்கரைகளுக்குச் செல்ல தமிழக அரசு தடை

December 14, 2021

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கடற்கரைகளுக்குச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.

“என்னது சிவாஜி செத்துட்டாரா” பாணியில் ஒரு சம்பவம்

தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முழு விவரம்!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு அன்று தடை… பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு!!

நாளையுடன் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையிலும், கொரோனா திரிபான ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலும், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று (டிசம்பர் 13) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, கொரோனா – ஒமிக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில்கொண்டும், பொதுமக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 31.12.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பண்டிகைக் காலங்களில், பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில்கொண்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்குத் தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடர்கிறது.

கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 31.12.2021 மற்றும் 1.1.2022 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரியக் கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும். மேலும், பின்வரும் செயல்பாடுகள், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும்.

அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின் காரணமாகப் பல மாதங்களாகப் பள்ளிகளுக்குச் செல்லாததால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைந்துள்ளதையும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டும், 03.01.2022 முதல் அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டும்), அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாகச் செயல்படும்” என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சுழற்சி முறை வகுப்பில் மாணவர்கள் 50 சதவிகிதம் பேர் மட்டுமே வகுப்பறையில் இருந்து பாடங்களை கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

தீபா, தீபக்கிற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை!

Next Post

பூஞ்ச் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை..!

Next Post

பூஞ்ச் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version