வணிக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இம்மாத இறுதி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வரவுள்ளார்.
இந்தியாவுக்கு போரிஸ் ஜான்சன் வருவது முன்னரே முடிவு செய்யப்பட்டு இருந்தது. கடந்தாண்டு 2 முறை பயணமாக அவர் இங்கு வருவதற்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பிரச்னை காரணமாக அது நடைபெறவில்லை.
தற்போது நாட்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, போரிஸ் ஜான்சன் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 22-ம் தேதி அவர் இந்தியா வரலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடைபெற்ற காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் இந்தியா – இங்கிலாந்து பிரதமர்களும் கடைசியாக நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.