14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain in Coimbatore : Latest news and update on Rain in Coimbatore

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *