பதக்கவேட்டையை தொடரும் இந்தியா ஷாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா, தீபக் புனியா தங்கம் வென்று அசத்தல்

பதக்கவேட்டையை தொடரும் இந்தியா ஷாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா, தீபக் புனியா தங்கம் வென்று அசத்தல்

காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 26 பதக்கங்களை வென்று 5வது இடத்தில் உள்ளது.

Image

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது.மல்யுத்த போட்டியில் இந்தியா ஒரே நாளில் 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

Image

நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்த போட்டியில் 65கிலோ எடைபிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கப்பதக்கம் வென்றார். பெண்களுக்கான 62கிலோ பிரிஸ்டைல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்றார். இதேபோல் தீபக் புனியா ஆண்களுக்கான 86கிலோ பிரிஸ்டைலில் தங்கப்பதக்கமும், பெண்களுக்கான 68கிலோ பிரிஸ்டைலில் திவ்யா கக்ரன் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

Bajrang Punia runs around the arena in a blue singlet, his arms raised above his head holding an Indian flag. He blows out his cheeks.

மற்றொரு போட்டியில் ஆண்களுக்கான 125கிலோ பிரிஸ்டைலில் மொகித் க்ரிவால் வெண்கலப்பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலத்துடன் 26 பதக்கங்களை வென்று இந்தியா 5வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலியா (140 பதக்கங்கள்: தங்கம் 50, வெள்ளி 44,வெண்கலம் 46),இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து(131 பதக்கங்கள்) 3ம் இடத்தில் கனடா (67 பதக்கங்கள்) 4ம் இடத்தில் நியூசிலாந்து (41பதக்கங்கள்) என அடுத்தடுத்து உள்ளன.

Image
Image
author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *