அவதார் 2 படத்தின் தமிழ் பதிப்பின் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது.
2009ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில் அவதார் 2 தி வே ஆப் வாட்டர் திரைப்படம் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்நிலையில் அவதார் 2 தமிழ் பதிப்பின் போஸ்டர் வெளியாகியுள்ளது.இப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் டிசம்பர் 16ம் தேதி வெளியாகவுள்ளது.




