அரிவாளுடன் துரத்தும் திமுக கவுன்சிலர் வைரலாகும் வீடியோ

அரிவாளுடன் துரத்தும் திமுக கவுன்சிலர் வைரலாகும் வீடியோ

திமுக கவுன்சிலர் அரிவாளுடன் வெட்ட துரத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

திருச்சி மாவட்டம், தெற்கு தத்தமங்கலத்தை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் நித்யாவின் கணவர் வெற்றிச்செல்வன் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இந்த நிலையில், அவரிடம் கடன்கொடுத்த குணசேகரன் மற்றும் அவரது சகோதரர்கள், பணத்தை திருப்பிக் கேட்டபோது அரிவாளால் வெட்டுவதற்கு முயற்சித்தார். குடிபோதையில் இருந்த அவர், அவரது மனைவி தடுத்தும் கேட்காமல் நடுத்தெருவில் அரிவாளை எடுத்துக்கொண்டு அவர்களை வெட்டுவதற்கு ஓடினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. சிலர், இந்த வீடியோவை எடிட் செய்து ’ஸ்டாலிதான் வராரு விடியல் தரப்போறாரு’ என்ற பாடலை இணைத்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *