வரதட்சணை கேட்டு பெண்ணின் தலையில் சிறுநீர் கழிப்பு அதிர்ச்சி சம்பவம்

வரதட்சணை கேட்டு பெண்ணின் தலையில் சிறுநீர் கழிப்பு அதிர்ச்சி சம்பவம்

வரதட்சணை கொடுக்காததால் பெண்ணின் தலையில் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Work-From-Home Does Not Mean End Of Workplace Sexual Harassment

பெங்களூர் பசவனகுடி மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் (26) ஒரு பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், “ நான் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர். எனது தந்தை ஐதாராபாத்தில் உள்ள ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். எனக்கும், பெங்களூரு பசவனக்குடியை சேர்ந்த சந்தீப் என்பவருக்கும் 2021ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆடம்பரமாக நடந்த எங்கள் திருமணத்திற்கு எனது தந்தை ₹6 கோடி செலவு செய்தார்.

மேலும், எனது கணவர் சந்தீப்புக்கு திருமணத்தின் போது  200 கிலோ வெள்ளி, 4 கிலோ தங்கம், ₹55 லட்சம் மதிப்பிலான கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்தார். இந்த நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு சந்தீப்பும், அவரது பெற்றோரும் கொடுமைப்படுத்தி வருகின்றனர். சந்தீப் குடித்துவிட்டு வந்து என் தலையில் சிறுநீர் கழிக்கிறார். கொன்றுவிடுவேன் என்றும் கொலைமிரட்டல் விடுக்கிறார். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு புகார் அளித்திருந்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *