நரிக்குறவர் பெண் அஸ்வினி பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
’ஜெய்பீம்’ படத்திற்கு பிறகு சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு அதிகாரிகள் முன்வந்தனர். இதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் இன மக்களுக்கு வீடு கட்டி தரப்படும் என்று அறிவித்து ₹1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். ஆனால் அந்த லோன் ஒருவருக்கு கூட கிடைக்கவில்லை என்றும் வீடு கட்டி தரேன்னு சொன்னாங்க அதுவும் கிடைக்கவில்லை என்றும் நரிக்குறவர் பெண் அஸ்வினி பேசும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அரசு உதவிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். முன்னதாக, கோயிலில் வழங்கப்படும் இலவச அன்னதான திட்டத்தில் தனக்கு உணவு வழங்காமால் அடித்து துறத்துகின்றனர் என்று துணிச்சலோடு கூறியவர் அஸ்வினி. அதன்பிறகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவரை அழைத்து அவருடன் அமர்ந்து சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.