கோப்ரா படத்திற்கு U/A சான்றிதழ் மறுப்பு

கோப்ரா படத்திற்கு U/A சான்றிதழ் மறுப்பு

கோப்ரா திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்க தணிக்கைக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் கோப்ரா. இப்படம் ஆகஸ்டு 31ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கவேண்டும் என்றும் சில காட்சிகளை அதற்காக நீக்க தயார் என்றும் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை நிராகரித்த தணிக்கைக் குழு விக்ரம் கதாபாத்திரத்தின் சாராம்சத்தை சுட்டிக்காட்டி ஏ சான்றிதழ் வழங்கியது.இதற்கிடையே தயாரிப்பாளர் லலித்குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து படத்திற்கு யுஏ சான்றிதழ் பெறுவதற்கான முயற்சியில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *