செப்டம்பர் 16ம் தேதி வெளியாகிறது ‘சினம்’

செப்டம்பர் 16ம் தேதி வெளியாகிறது ‘சினம்’

சினம் படம் செப்டம்பர் 16ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Image

1995ம் ஆண்டில் வெளியான முறைமாமன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருண்விஜய். அஜித்துடன் இணைந்து நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரும் திருப்பு முனையாக இவருக்கு அமைந்தது. இதை தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தடம், குற்றம் 23 மாபியா, யானை படங்களை தொடர்ந்து தற்போது, ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி,என்.ஆர். குமாரவேலன்  இயக்கும் சினம் படத்தில் நடித்து வருகிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்த படத்தில் சப் இன்ஸ்பெக்டர் பாரி வெங்கட் என்ற கதாபாத்திரத்தில் அருண்விஜய் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 16ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *