ஆசியக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்களை எடுத்தது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக ஆடி 33 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். புவனேஷ்குமார் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்த போட்டி விராட் கோலிக்கு 100 ஆட்டமாகும். இதன்மூலம் மூன்று (ஒரு நாள், டெஸ்ட்,டி20) விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் குறைந்தது 100 ஆட்டங்களுக்கு மேல் விளையாடிய 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முதல் இடத்தில் நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் இருக்கிறார்.