விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பால்கோவா மோதகம்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பால்கோவா மோதகம்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 1/4 கப்

ரவா – 1/4கப்

உப்பு (தேவையான அளவு)

பால்கோவா – 1 கப்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா, ரவா, உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இதில்,சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைய வேண்டும். பிசைந்த மாவின் மீது ஒரு ஈரத்துணியை கொண்டு 15-20 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். பின்பு மீண்டும் ஒருமுறை மாவை பிசைய வேண்டும். பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

பின், சப்பாத்தி போன்று திரட்டி அதன் நடுவில் பால்கோவாவை வைத்து ஓரங்களை ஒன்றாக இணைத்து மோதகம் போல செய்து கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் காய்ந்ததும் மோதகங்களை பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான, மொறுமொறுப்பான பால்கோவா மோதகம் ரெடி.  

இந்த விநாயகர் சதுர்த்திக்கு இதை செய்து அசத்துங்கள்

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *