சென்னையில் நாளை வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கும் முகாம்

சென்னையில் நாளை வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கும் முகாம்

சென்னையில் நாளை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கு முகாம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ECI takes U-turn; linking of Aadhar to voter ID now compulsory?

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த ஆகஸ்டு 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முகாம் நாளை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி வாக்காளர் பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்குச்சாவடி நிலை அலுவலரை அணுகி இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏற்கெனவே, இணையதளம் மூலமாகவோ,வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்தபோது படிவம் 6பி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை & கைப்பேசி விவரங்களை வழங்கியவர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ள தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *