சோழன் வந்தான்… ‘பொன்னியின் செல்வன் -1’ டிரைலர் வெளியானது

சோழன் வந்தான்… ‘பொன்னியின் செல்வன் -1’ டிரைலர் வெளியானது

பொன்னியின் செல்வன் 1 படத்தின் டிரைலர் வெளியானது.

Mani Ratnam's 'Ponniyin Selvan' first part run time revealed | Tamil Movie  News - Times of India

மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரமாண்டமாய் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன் -1. இப்படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெய்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமாய் நடைபெற்றது.

இதில் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. கமல்ஹாசனின் குரலோடு தொடங்கும் அந்த டிரைலர் 3.23 நிமிடங்கள் ஓடுகிறது. சோழ வம்சத்தை கண்முன் கொண்டுவரும் விதமாக டிரைலரில் காட்சிகள் மிகப் பிரமாண்டமாய் அமைக்கப்பட்டுள்ளது. இசையில் ஏ.ஆர்.ரகுமான் மிரட்டியிருக்கிறார்.  இந்த டிரைலர் வெளியீட்டால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *