11ம் வகுப்பு மாணவர்கள் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

11ம் வகுப்பு மாணவர்கள் 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவ, மாணவிகள் வரும் 9ம் தேதி வரை திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tamil Nadu class 12 state board exam schedule out: Here are the dates | The  News Minute

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:2022-2023ம் கல்வியாண்டில் அரசுப்பள்ளி மற்றும் அனைத்துவகை பள்ளிகளிலும் பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் (சிபிஎஸ்இ/ஐசிஎஸ்இ உள்பட) திறனறித் தேர்வு எழுத 9.9.2022 வரை https://dge.tn.gov.in/  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

திறனறித்தேர்வு கொள்குறி வகையில் நடைபெறும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும். இத்தேர்வு 1.10.2022 அன்று காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை நடைபெறும்.பத்தாம் வகுப்பு தமிழ்பாடம் இதற்கான பாடத்திட்டம் ஆகும். தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தேர்வில் வெற்றிபெறும் 1500 மாணவ, மாணவியர்களுள் 750 அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், 750 இதர பள்ளி மாணவர்களுக்கும் மாதம் ₹1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படவிருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *