செப்டம்பர் 15 முதல் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்

செப்டம்பர் 15 முதல் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்

மதுரையில் செப்டம்பர் 15ம் தேதி காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைக்கிறார்.

Free breakfast scheme for government schools to be rolled out in 15  districts of Tamil Nadu- The New Indian Express

தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும்  காலை உணவு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக, ₹33.56 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் 1.14 லட்சம் மாணவ,மாணவியர்கள்  பயன்பெறுவர்.

இந்நிலையில், அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதியன்று காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மதுரையில் தொடங்கி வைக்கிறார். மதுரை மாநகராட்சியில் உள்ள 26 தொடக்கப்பள்ளிகளில் 4338 மாணவர்கள் பயனடையும் வகையில் திட்டம் தொடங்கப்படுகிறது. இதேபோல் தமிழகத்தில் 23 நகராட்சிகளில் உள்ள 163 பள்ளிகளில் 17,427 மாணவ, மாணவியருக்கு சிற்றுண்டி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *