டிவி நடிகருடன் ராஜ்கிரண் மகள் திருமணம்

டிவி நடிகருடன் ராஜ்கிரண் மகள் திருமணம்

வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் சண்முகராஜனின் தம்பி முனீஸ்ராஜா. இவர் நாதஸ்வரம் சீரியலில் நடித்து பிரபலமானவர். தேவராட்டம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் காமெடி வேடத்திலும் நடித்துள்ளார்.

Raj Kiran's daughter secretly marries TV actor against his wishes? - Tamil  News - IndiaGlitz.com

இந்த நிலையில், இவர், இயக்குநரும், நடிகருமான ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவருக்கு முகநூல் மூலம் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டிலும் எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது.இதன் காரணமாக இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, முனீஸ்ராஜா குடும்பத்தில் ஏற்றுக்கொண்டதாகவும், ராஜ்கிரண் குடும்பத்தின் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக இரு குடும்பத்தினரும் வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *