Black Sheep ஹீரோவுக்கு டும் டும் டும்

Black Sheep ஹீரோவுக்கு டும் டும் டும்

பிளாக்‌ஷிப் இணையதளம் மூலம் பிரபலமானவர் விக்னேஷ்காந்த். சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து பின் சினிமாவில் காமெடி நடிகர் ஆனவர். மீசைய முறுக்கு, தேவ், நட்பே துணை, மெஹந்தி சர்க்கஸ், களவாணி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Image

இந்த நிலையில், நேற்று இவரின் திருமணம் திருச்சி வயலூரில் உள்ள முருகன் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. தனது உறவுக்கார பெண்ணான இன்ஜினியர் ராஜாத்தியை மணமுடித்தார்.

Image
Image
Image
Image
Image

பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் நடிகர் சிவகார்த்திக்கேயன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர், நடிகர், பன்முக கலைஞர் ஞானசம்பந்தன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மாப்பிள்ளை விக்னேஷ்காந்த், சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *