சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் அங்கு என்ன மாதிரியான சவால்களை (சிக்கல்களை) சந்திக்க வேண்டியிருக்கும் என்று இந்திய அரசு விளக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

PM to inaugurate 11 new medical colleges in Tamil Nadu and new campus of  Central Institute of Classical Tamil on 12th January | IBG News Suman Munshi

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

*சீனாவில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள FMGE (வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி)தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.

*கடந்த 2015 முதல் 2021 வரை இந்திய மருத்துவ  கவுன்சில் (MCI) மூலம்  FMGE தேர்வில் பங்கேற்ற 40,417 மாணவர்களில் 6,387 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது,சீனாவில் மருத்துவம் படித்ததில் 16% பேர் மட்டுமே  FMGE தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை, மாணவர்களும், பெற்றோர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

*சீன அரசால் அனுமதிக்கப்பட்ட 5ஆண்டு மருத்துவ படிப்பு &ஓராண்டு இன்டர்ன்ஷிப் வழங்கும் 45 பல்கலைக்கழகங்களில் மட்டுமே சேர வேண்டும். பிற கல்லூரிகளில் சேரக்கூடாது.

*எனவே, மாணவர்கள் கல்லூரிகளில் சேரும் முன் அதன் அங்கீகாரத்தை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

Zhejiang Chinese Medical University - Scholarship for 2020-2021 year

*சீனாவில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள் அந்த நாட்டிலேயே பயிற்சி பெற உரிமம் பெற வேண்டும்.இதற்கு இன்டர்ன்ஷிப் முடிந்தபிறகு  மாணவர்கள் சீன மருத்துவ தகுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

* இந்திய மாணவர்கள் சீன மொழியில் வழங்கப்படும் மருத்துவ கல்வி திட்டத்தில் சேர அனுமதி கிடையாது. எனவே, இருமொழி முறையில் (ஆங்கிலம் &சீன மொழி) பயிற்றுவிக்கும் கல்லூரிகளில் மட்டுமே சேர வேண்டும்.

* சீன மொழியான புடோங்குவாவை கற்றுக்கொள்வது அங்கு கட்டாயமாகும்.

*மேலும், சீனாவில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே FMGE தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *